காசாவில் பள்ளி மீது தாக்குதல்; குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
காசாவில் பள்ளி மீது தாக்குதல்; குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:04 AM
ஜெருசலேம்:
மத்திய காசா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இன்று (அக்., 14) ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 65 பேர் பலத்த காயமுற்றனர்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் துயரத்தை ராணுவம் பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என குறிப்பிட்டு இருந்தது.
இதற்கிடையே, மத்திய காசா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.