UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:04 AM
நியூயார்க்:
விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் பத்திரமாக ஏவுதளத்திற்கே திரும்பி சாதனை படைத்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் நேற்று 5-வது முறையாக அந்த ராக்கெட் சோதிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. சற்று நேரத்துக்கு பிறகு ராக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி செங்குத்தாக கீழே இறங்க தொடங்கியது. எப்படி புறப்பட்டு சென்றதோ அதுபோலவே நெருப்பை கக்கியபடி மெல்ல மெல்ல கீழே இறங்கியது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை யாரும் செய்யாத ஒரு நிகழ்வை தங்களுடைய ஸ்டார்ஷிப் சோதனை மூலம் செய்துகாட்டியுள்ளது. இதன்படி 5,000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட் புவியீர்ப்பு விசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பி அதிசயிக்க வைத்துள்ளது.