UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 12:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு:
ஸ்ரீராமர் பாடல் பாடிய மாணவர் மீது, தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா கண்டனம் தெரிவித்தார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று அவர் கூறியதாவது:
மைசூரின் செயின்ட் பிலோமினாஸ் கல்லுாரியில் நேற்று முன்தினம் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், பிரபல பாடகர் ஸ்ரீஹர்ஷா, 'ஜெயது ஜெயது ஜெய் ஸ்ரீராம்' என்ற பாடலை பாடினார். அப்போது சில விஷமிகள், நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்தனர்.
ஒரு ஹிந்து மாணவரையும் தாக்கினர். இதை பார்த்து நாங்கள் கைகட்டி அமர்ந்திருக்க வேண்டுமா. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.