தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.இ.ஏ., 2026 மாணவர்கள் கவனத்திற்கு...

டி.என்.இ.ஏ., 2026 மாணவர்கள் கவனத்திற்கு...

டி.என்.இ.ஏ., 2026 மாணவர்கள் கவனத்திற்கு...


UPDATED : ஜூன் 24, 2026 11:05 AM

ADDED : ஜூன் 24, 2026 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2026 11:05 AM ADDED : ஜூன் 24, 2026 11:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, கலந்தாய்விற்கு காத்திருக்கும் மாணவர்கள் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும் குறித்த தகவல்கள் இதோ!

செய்ய வேண்டியவை:

* தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருங்கள்.

* விண்ணப்ப பதிவில் அளித்த மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை செயலில் வைத்திருங்கள். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்.

* கடந்த ஆண்டுகளின் 'கட்-ஆப்' விவரங்களை ஆய்வு செய்யவும். தரம், உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு சாதனை ஆகியவற்றை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை பட்டியலிடவும்.

* அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு www.tneaonline.org எனும் இணையதளத்தை தினமும் பார்வையிடவும். கவுன்சிலிங் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் அருகில் உள்ள டி.எப்.சி., எனும் உதவி மையங்களை தொடர்புகொள்ளலாம்.

* கலந்தாய்வின் போது, உரிய நேரத்தில் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவும், கல்லூரி சேர்க்கையை நிறைவு செய்யவும் வேண்டும்.


'சாய்ஸ் பில்லிங்'
'மிக கவனமாக கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பட்டியலிடவும். அதிக விருப்பமுள்ள கல்லூரிக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மேலும், அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களை பதிவு செய்வது நல்லது.

செய்யக்கூடாதவை:

* விருப்பப் பதிவு செய்வதை இறுதி நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டாம். அந்நியர்களின் ஆலோசனையை நம்ப வேண்டாம். விபரம் தெரிந்த நலன் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசிக்கலாம்.

* ஓ.டி.பி., மற்றும் உள்நுழைவு விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

* உங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீட்டை கவனிக்காமல் விட வேண்டாம்; தாமதம் ஏற்பட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படலாம்.

* வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி முடிவெடுக்க வேண்டாம்; அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றவும்.

- டாக்டர் புருஷோத்தமன், செயலர், டி.என்.இ.ஏ., -2026



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us