ஆரோவில் திருவிழா - 2025 நடிகர், பேராசிரியர்கள் பங்கேற்பு
ஆரோவில் திருவிழா - 2025 நடிகர், பேராசிரியர்கள் பங்கேற்பு
UPDATED : பிப் 28, 2025 12:00 AM
ADDED : பிப் 28, 2025 10:27 AM
வானுார்:
ஆரோவில்லில் நடைபெறும் திருவிழாவில் தமிழ் வரலாற்று கண்ணோட்டத்தில் சமூக அரசியல் பார்வை தலைப்பில் அமர்வு நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில், ஆரோவில் திருவிழா-2025 நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் வரலாற்று கண்ணோட்டத்தில் சமூக அரசியல் பார்வை தலைப்பில் நடந்த அமர்வில் சிவப்பிரகாசம், தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும், செழுமைப்படுத்துவதிலும் சைவ மற்றும் வைணவ பக்தர்கள் ஆற்றிய முக்கியப் பங்குகள் குறித்து பேசினார்.
தமிழ் சமூக அரசியல் சிந்தனை மற்றும் கலாசார அடையாளத்தை வடிவமைப்பதில் ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் இலக்கிய ஜாம்பவான்கள், ஸ்ரீ அரவிந்தர், பாரதியார் ஆகியோரின் ஆழமான தாக்கத்தை அவர் வலியுறுத்தினார்.
நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் குறித்து தனது நுண்ணறிவு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ரமேஷ் என்பவர் பேசுகையில், ஆயுதம் தயாரிப்பதில் தமிழர்கள் மிகவும் திறமையானவர்களாக இருந்தபோதும், போரைத் தவிர்க்கும் அளவுக்கு அவர்கள் புத்திசாலிகளாக இருந்தது அவர்களின் அறிவுத்திறன் மற்றும் மேம்பட்ட கைவினைத்திறனை மேலும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.