ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அதிகாரம்
ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அதிகாரம்
UPDATED : ஏப் 21, 2026 02:42 PM
ADDED : ஏப் 21, 2026 02:45 PM
அ நிறம் | அளவு
மேல்மருவத்தூர்:
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்கு, தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை அண்ணா பல்கலை வழங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி கடந்த 42 ஆண்டுகளாக பொறியியல் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது.
இதனால், பல்கலைக்கழக மானிய குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், இந்த கல்வியாண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு, தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளன.
இதனை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
