UPDATED : செப் 02, 2024 12:00 AM
ADDED : செப் 02, 2024 09:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னையில் வீடுதோறும் நுாலகங்கள் அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் தனி நபருக்கு, மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில், சொந்த நுாலகங்களுக்கான விருது, 3,000 ரூபாய் மதிப்பில் கேடயம், சான்றிதழ், மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுக்கு விண்ணப்பிப்போர். தங்கள் வீட்டில் உள்ள நுாலகத்தில், எத்தனை நுால்கள் உள்ளன; எந்த வகையான நுால்கள் மற்றும் அரிய நுால்கள் விபரத்தை, பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன், dlochennai1@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பவும்.
மாவட்ட நுாலக அலுவலர், மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலகம், 735, அண்ணாசாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.