குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்லும் பெற்றோர் ஹெல்மெட் அணியணும்
குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்லும் பெற்றோர் ஹெல்மெட் அணியணும்
UPDATED : செப் 02, 2024 12:00 AM
ADDED : செப் 02, 2024 09:12 AM
கோவை:
இருசக்கர வானங்களில் ஹெல்மெட் அணியாமல், பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களுக்கு, போலீசார் அபராதம் விதித்தனர்.
மாநகர போலீஸ் சார்பில், தினந்தோறும் வாகன தணிக்கை நடத்தி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. தினமும், சுமார் ஆயிரம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதியப்படுகின்றன.
இந்நிலையில், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் குறித்து, கடந்த சில நாட்களக கோவை மாநகர போக்குவரத்து போலீசார், பள்ளி பகுதிகளில் (ஸ்கூல் ஜோன்), சிறப்பு தணிக்கை நடத்தினர். இதில், ஹெல்மெட் அணியாமல் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற, 1,083 பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி, அபராதம் விதிக்கப்பட்டது.
சிறப்பு தணிக்கை மூலம் தனியார் வானங்களில் பொருத்தப்பட்டிருந்த, 41 ஏர் ஹாரன்கள் அகற்றப்படுத்தப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 19 விளம்பர பதாகைகள் மற்றும் ஒன்பது கடைகள் அகற்றப்பட்டன.