UPDATED : செப் 02, 2024 12:00 AM
ADDED : செப் 02, 2024 09:11 AM
போத்தனூர்:
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணப்பலன்களை பெற்றுத்தராத மதுக்கரை வட்டார கல்வி அலுவலரை கண்டித்து, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை, மதுக்கரை வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கரை வட்டார தலைவர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணப்பலன்களை பெற்றுத் தராமல் காலதாமதம் செய்வது, மருத்துவ விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக தனிநபரை பணியமர்த்தி ஆசிரியர்களை சம்பளம் தர வற்புறுத்துவது, ஆசிரியர்கள் சம்பளத்தில் முன்னறிவிப்பின்றி அதிக தொகை பிடித்தம் செய்வது, கூட்டுறவு கடன் தொகைக்கு செலுத்தப்பட்ட தவணை தொகையை வரவு வைக்காமலும், திரும்ப தராமலும் தாமதம் செய்வது கண்டித்து அமைப்பின் செயலாளர் மலர்வேந்தன், பொருளாளர் நிர்மலா, மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் பேசினர்,
ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகள் உள்பட, 125 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.