UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 06:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு தனித்தேர்வர்கள் செப்., 20க்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
2024-25ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாதவர்களும் செய்முறைத் தேர்வுக்கு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப்படிவத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட விண்ணப்படிவத்தை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று செப்.,2 முதல் செப்.,20 வரை பதிவுக்கட்டணம் ரூ.125 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.