சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தமிழ் விருது வழங்கி கவுரவிப்பு
சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தமிழ் விருது வழங்கி கவுரவிப்பு
UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 12:18 PM
பெங்களூரு;
தமிழ் புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தமிழ் பெருந்தகை, ஆளுமை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 10 நாட்கள் நடந்த, தமிழ் புத்தக திருவிழா நிறைவு நேற்று நடந்தது. மறைந்த திருவள்ளுவர் சங்க தலைவர் கி.சு.இளங்கோவன் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒரு நிமிட மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது.
பின், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள், தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சி.ராசனுக்கு கர்நாடக தமிழ் பெருந்தகை விருது; 17 பேருக்கு தமிழ் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
பெயர்கள்.... எந்த துறை.... ஊர்
1. அ.சங்கரி சீனிவாசன்....தமிழ் இலக்கியம், தமிழ் கல்வி...பெங்களூரு
2.இர.ஜமுனா...தமிழ் கல்வி, தமிழ் பணி....பெங்களூரு
3. ஜெய்சக்தி....தமிழ் இலக்கியம், தமிழ் அமைப்பு....பெங்களூரு
4.பெ.கணேஷ்...தமிழ் இலக்கியம்...தங்கவயல்
5.ஒய்.ஜான்பிராங்க்....தமிழ் பள்ளி...பெங்களூரு
6.ப.திருநாவுக்கரசு....தமிழ் கல்வி...பெங்களூரு
7.சி.கவிதாசன்....தமிழ் கலை, நாடகம்...பெங்களூரு
8.ஞான.மகிமைதாஸ்....தமிழ் பணி... பெங்களூரு
9.மா.நடராஜ்....தமிழ் பணி.... பெங்களூரு
10.க.சம்பத்....தமிழ் கல்வி.... பெங்களூரு
11.வி.மெர்ன்...தமிழ் கல்வி... பெங்களூரு
12.ஆர்.துரை...தமிழ் பணி, தொழில்...பெங்களூரு
13.வ.பாஸ்கரன்...தமிழ் பணி, தொழில்...பெங்களூரு
14.கி.செந்தில்....தமிழ் அமைப்பு... மங்களூரு
15.எஸ்.டி.குமார்...அரசியல், தமிழ் பணி... பெங்களூரு
16.இரா.கருணாமூர்த்தி...தமிழ் பணி, அரசியல்... பத்ராவதி
17.சு.சிவகுமார்....தமிழ் பணி, அரசியல்...ஷிவமொக்கா
தங்கவயல் வக்கீல் பாலன், மைசூரு தமிழ் சங்க தலைவர் பிரான்சிஸ், பல்லாரி வி.புகழேந்தி ஆகியோருக்கும் தமிழ் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
பெங்களூரு விமானபுராவில் உள்ள 130 ஆண்டுகள் பழமையான தெய்வானையம்மாள் துவக்கபள்ளி, ஜாலஹள்ளியில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான பாத்திமா நடுநிலைப்பள்ளி, சிவாஜிநகரில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., பெண்கள் உயர்நிலைபள்ளி, ஷிவமொக்காவில் 60 ஆண்டுகள் பழமையான அரசு தமிழ் உயர்நிலை பள்ளிகளுக்கு, கர்நாடக சீர்மிகு செந்தமிழ் பள்ளிவிருது வழங்கப்பட்டது.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லில் 30 ஆண்டுகள் பழமையான விஸ்வசேத்தனா பி.யு. கல்லுாரி, கோலார் மாலுார் கிறைஸ்ட் கல்லுாரிக்கு 'கர்நாடக சீர்மிகு செந்தமிழ் கல்லுாரி' விருது வழங்கப்பட்டது.
பெங்களூரு பிரகாஷ்நகரில் உள்ள வடலுார் ஸ்ரீஜோதி ராமலிங்க சுவாமிகள் சன்மார்க்க சங்கம், பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திருவள்ளுவர் சங்கம், தங்கவயல் உலக தமிழ் கழகத்திற்கு கர்நாடக சீர்மிகு தமிழ் அமைப்பு விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். திருவள்ளுவர் சிலை, பட்டயம், மாலை, திருக்குறள் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்கள் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர், வெங்கடேசன், மணிவாசகம் ஆகியோருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். தங்கள் குடும்பத்தினருடன் மொபைல் போனில் செல்பி எடுத்தனர்.
ரொம்ப மகிழ்ச்சி
புத்தக திருவிழாவில் தமிழ் சொந்தங்களை கண்டது ரொம்ப மகிழ்ச்சி. நிறைய பேர் குடும்பம், குடும்பமாக வந்தனர். குழந்தைகளுடன் வந்தனர். இங்கு அமைக்கப்பட்டு இருந்த புத்தக அரங்கில் இருந்து, எனக்கு பிடித்த புத்தகங்களை வாங்கினேன். தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் உங்களில் ஒருவன் புத்தகத்தை வாங்கி உள்ளேன். இந்த புத்தகத்தை நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு வழியாக இப்போது புத்தகம் என் கையில் உள்ளது என பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலர், திவ்யா சேஷாத்ரி கூறினார்.