தினமலர் கட்டுரையுடன் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு
தினமலர் கட்டுரையுடன் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு
UPDATED : நவ 06, 2024 12:00 AM
ADDED : நவ 06, 2024 09:14 AM
திருப்புல்லாணி :
திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து களிமண்குண்டு கிராமத்தில் தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையை வழங்கி கடல்வாழ் உயிரினங்கள் குறித்து மீனவ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மன்னார் வளைகுடா உயிர்கோளத்தில் உள்ள கடல் வளங்களையும் அரிய வகை உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பல்வேறு தன்மை பரவல் பற்றி மீனவ மக்களிடம் எடுத்துரைத்தனர்.
தினமலர் நாளிதழில் வந்த பல்லுயிர்களின் சொர்க்கம் மன்னார் வளைகுடா கட்டுரை பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை அகற்றி சுத்தம் செய்தனர். களிமண்குண்டு தலைவர் பாண்டி, வேலாயுதபுரம் கிராம தலைவர் சந்திரன், வேலு, நல்லோர் வட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு, தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணிக்க மாணவர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைமையாசிரியர் டேவிட் மோசஸ், உதவித் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் பாராட்டினர். வட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி, ஆசிரியர் மணிவண்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.