sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சாதனை இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

சாதனை இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சாதனை இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சாதனை இளைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 06, 2024 12:00 AM

ADDED : நவ 06, 2024 09:13 AM

Google News

UPDATED : நவ 06, 2024 12:00 AM ADDED : நவ 06, 2024 09:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில் விருது பெற, சாதனை இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழக தலைவர் உசேன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:



புதுச்சேரி, குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் 33ம் ஆண்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா, நுால்கள் வெளியிட்டு விழா ஆகிய முப்பெரும் விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது.

இந்தாண்டு, சிறுவர் கலைச்சிகரம், சிறுவர் கலைச்சுடர், இளைஞர் கலைச்சிகரம், இளைஞர் கலைச்சுடர் ஆகிய விருதுகள் கலைத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 வயது முதல் 30 வயதுடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

பேச்சு, கட்டுரை, பாட்டு, இசைக் கருவிகள், மீட்டுதல், ஓவியம், நாடகம், நாட்டுப்புறவியல், போன்ற துறைகளில், சாதனை படைக்கும் சிறுவர்கள், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பவர்களின் பெயர், வயது, பிறந்த தேதி ஆகியவற்றை சான்றிதழுடன் இணைத்து, . படிக்கும் பள்ளி, கல்லுாரி, சாதனை படைக்கும் துறை ஆகிய விபரங்களை எழுதி அனுப்ப வேண்டும்.

இதனுடன், பாஸ்போர்ட் போட்டோவை இணைத்து, வரும் 20ம் தேதிக்குள், பேராசிரியர் உசேன், எண், 390, பாரதியார் சாலை, அசோக் நகர், புதுச்சேரி 605 008. நேரில் அல்லது போஸ்ட் மூலம் அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு 9442582281, 7010826067 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us