sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாணவர்களிடையே விழிப்புணர்வு

திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாணவர்களிடையே விழிப்புணர்வு

திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாணவர்களிடையே விழிப்புணர்வு


UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM

ADDED : ஜூன் 21, 2025 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM ADDED : ஜூன் 21, 2025 09:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வால்பாறை :
திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து, மாணவர்கள் மத்தியில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

வால்பாறை நகராட்சி, துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மேத்யூெஹன்றி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் பேசியதாவது:


வால்பாறையின் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்க வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் கழிவுகளை வீதியில் வீசக்கூடாது. பொது இடத்தில் குப்பை கொட்டினால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், ஆற்றோரப்பகுதியில் வீடு கட்டி வசிக்கும் மக்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை, தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்வது பொதுமக்களின் கடமை. சுற்றுலாபயணியரும், உள்ளூர் மக்களும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் நித்யானந்தம், அருக்காணி, துாய்மை பாரத திட்ட மேற்பார்வையாளர்கள் ராம்குமார், ராகவன் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us