UPDATED : ஜூலை 29, 2026 07:45 PM
ADDED : ஜூலை 29, 2026 07:46 PM
விருத்தாசலம்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே இருப்பு பாதை போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார்.
ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பிலோமின்ராஜ், இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் பிருந்தா மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் ரயில் வரும் சமயங்களில் ரயில் பாதையை கடக்க கூடாது. ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய கூடாது.
ரயில் தண்டவாளங்களில் கருங்கற்களை வைக்கக்கூடாது. ரயில்களில் கல்வீசி எறிய கூடாது. தண்டவாள ஓரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் நிறைமதி, சுரேஷ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
