தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

கூட்டுறவு பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

கூட்டுறவு பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்


UPDATED : ஜூலை 29, 2026 07:46 PM

ADDED : ஜூலை 29, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2026 07:46 PM ADDED : ஜூலை 29, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடப்பாண்டில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மண்டல இணை பதிவாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:


தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் செயல்படும் தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2026 - 27ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும், 31, மாலை, 05:00 மணி வரையிலும், விண்ணப்பதாரர்கள் சேர்க்கை வரும், ஆக., 3 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி அல்லது, டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி பெற்றவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த, 1ல், குறைந்தபட்சம், 17 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய். இப்பயிற்சியில் சேர. உச்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணமாக, 20,750 ரூபாய்.

பயிற்சி விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின், www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பித்தவுடன் பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் கல்வி சான்றிதழ்கள், வகுப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களுடன் பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து, 'ஸ்பாட் அட்மிஷன்' முறையில் சேர்க்கை நடக்கிறது.

இப்பயிற்சி, இரண்டு பருவ முறையில் ஓராண்டு காலம் நடக்கும் எனவும், பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழ் வழியில் மட்டுமே கற்பிக்கப்படும். மேலும், விபரங்களுக்கு, தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்திலோ அல்லது 04346 - 263529, 98853 97075 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us