UPDATED : ஏப் 20, 2024 12:00 AM
ADDED : ஏப் 20, 2024 11:07 AM
கெய்ரோ:
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து பிரபலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களான ஆக்ராவின் தாஜ்மஹால், குதுப்மினார், ஹைதராபாத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் குறித்த படங்கள் பஸ்களில் விளம்பரமாக இடம் பெற்றுள்ளது. இதனை எகிப்து நாட்டுக்கான இந்திய தூதர் அஜித் குப்தே தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் எகிப்து நாட்டினருக்கு ஏற்ற சுற்றுலா தலங்கள் இந்தியாவில் உள்ளது. இதனை அனைவரும் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்த பஸ்கள் நகர் முழுவதும் வலம் வருகின்றன. இதன் மூலம் எகிப்து நாட்டினரை இந்தியாவுக்கு வர அதிகம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளம்பர தொடக்க விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள், எகிப்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.