UPDATED : மே 02, 2025 12:00 AM
ADDED : மே 02, 2025 10:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்:
வெண்ணந்துார் யூனியன், ஆர்.புதுப்பாளையம் அரசு ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளி வயது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஜான்சி அன்னம்மாள் தலைமை வகித்தார்.
ஆசிரியர்கள், அரசுப்பள்ளியில் செயல்படும் அரசு நலத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் என, பலர் கலந்துகொண்டனர்.

