கைவினை பயிற்றுவிப்பாளர் பயிற்சி 2025-26க்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
கைவினை பயிற்றுவிப்பாளர் பயிற்சி 2025-26க்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
UPDATED : மே 02, 2025 12:00 AM
ADDED : மே 02, 2025 10:32 AM
சென்னை:
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துக்குட்பட்ட பயிற்சித் தலைமை இயக்குநரகம், 2025-26 கல்வியாண்டிற்கான கைவினை பயிற்றுவிப்பாளர் பயிற்சித் திட்டத்தில் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய வர்த்தக சான்றிதழ், தேசிய பழகுநர் சான்றிதழ், பட்டம், பட்டப்படிப்பு அல்லது அதன் இறுதி ஆண்டு தேர்வெழுதுபவர்கள் www.nimionlineadmission.in இணையதளத்தின் மூலம் மே 8 முதல் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அகில இந்திய பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இது 2025 ஜூன் 15-ம் தேதி கணினி வழிக் தேர்வாக நாடு முழுவதும் நடைபெறும்.
தேர்வு மூலம் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள், தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களின் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவர். கடந்த 2019 முதல் 2024 வரை 45,025 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர்.

