UPDATED : செப் 26, 2026 12:29 PM
ADDED : செப் 26, 2026 12:31 PM
காரமடை:
காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் பவன்குமார் அறிவுறுத்தலின் படி, மாணவிகளுக்கு, அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யும் விதத்தில், பல்வேறு அரசுத் துறை அலுவலர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தலைமை ஆசிரியை தீபா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அறிமுகம் இல்லாத நபர்களைத் தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு வரும்போதும், வீட்டிற்குச் செல்லும்போதும் அடையாளம் தெரியாத நபர்களின் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
புதிய நபர்கள் சாக்லேட், தின்பண்டங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் கொடுத்தால், தவிர்க்க வேண்டும். யாராவது தவறான எண்ணத்தோடு அல்லது தொட்டுப் பேசினாலோ, கிண்டல் செய்தாலோ உடனடியாக பெற்றோரிடமோ அல்லது பள்ளி ஆசிரியர்களிடமோ தெரிவிக்க வேண்டும், என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
