UPDATED : நவ 24, 2026 11:31 AM
ADDED : நவ 24, 2026 11:32 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்:
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பரங்கிப்பேட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியர் சம்பத்குமார் வரவேற்றார். ஆசிரியர் அபிராமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் விஜயலதா மற்றும் சட்டப் பணிகள் குழு அமுதவல்லி முன்னிலை வகித்தனர்.
வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் குணசேகரன் போதைப் பொருள் தடுப்பு குறித்து பேசினார். வினாடி வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தேசத் தலைவர்கள் குறித்த நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.
உதவித் தலைமை ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.
