UPDATED : நவ 24, 2026 11:30 AM
ADDED : நவ 24, 2026 11:31 AM
அ நிறம் | அளவு
வால்பாறை:
வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், எம்.எல்.ஏ., சுதாகர், திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் லலிதா, அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் ஆகியோர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினர்.
பயிற்சி ஆசிரியர்கள கூறுகையில், 'பேஷன் டிசைன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரீசியன், பிட்டர் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளின் கீழ் படித்த, 60 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக கேடயம் வழங்கபட்டது,' என்றனர்.
