அமெரிக்க ஹிந்து பல்கலையுடன் ஆயுர்வேத கல்லுாரி இணைப்பு
அமெரிக்க ஹிந்து பல்கலையுடன் ஆயுர்வேத கல்லுாரி இணைப்பு
UPDATED : ஆக 12, 2024 12:00 AM
ADDED : ஆக 12, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் நெவேடா நகரில் கலிபோர்னியா ஆயுர்வேத கல்லுாரி இயங்கி வருகிறது.
கடந்த 1995ம் ஆண்டு அமெரிக்க மக்களிடம் ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டு செல்லும் நோக்கில், கலிபோர்னியா ஆயுர்வேத கல்லுாரியை டாக்டர் மார்க் ஹால்பெர்ன் என்பவர் துவக்கினார்.
இந்நிலையில், இந்த கல்லுாரியின் வளர்ச்சியை கருத்தில் வைத்து, அமெரிக்க ஹிந்து பல்கலையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, அமெரிக்க ஹிந்து பல்கலையின் தலைவர் டாக்டர் ஜஸ்வந்த் படேல் கூறுகையில், இந்த இணைப்பின் வாயிலாக, இந்தத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது, என்றார்.