sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பனாரஸ் ஹிந்து பல்கலை வேந்தர் கிரிதர் மாளவியா காலமானார்

/

பனாரஸ் ஹிந்து பல்கலை வேந்தர் கிரிதர் மாளவியா காலமானார்

பனாரஸ் ஹிந்து பல்கலை வேந்தர் கிரிதர் மாளவியா காலமானார்

பனாரஸ் ஹிந்து பல்கலை வேந்தர் கிரிதர் மாளவியா காலமானார்


UPDATED : நவ 18, 2024 12:00 AM

ADDED : நவ 18, 2024 10:29 PM

Google News

UPDATED : நவ 18, 2024 12:00 AM ADDED : நவ 18, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரயாக்ராஜ்:
பனாரஸ் ஹிந்து பல்கலை நிறுவனர் பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பேரனும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரிதர் மாளவியா (88) உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.

அவரது மகன் மனோஜ் மாளவியா கூறுகையில், கடந்த வாரம் முதல் என் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் எந்த பெரிய நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றார்.

மாளவியாவுக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மாளவியா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 1988 முதல் 1998 வரை நீதிபதியாகப் பணியாற்றினார். நவம்பர் 2018ல், பனாரஸ் ஹிந்து பல்கலை வேந்தராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் மோடி இரங்கல்

ஓய்வு பெற்ற நீதிபதி கிரிதர் மாளவியா மறைவு, நிவர்த்தி செய்ய முடியாத இழப்பு. கிரிதர் மாளவியாவுக்கு எங்களின் இதயப்பூர்வமான அஞ்சலிகள். அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவரது மறைவு முழு நாட்டிற்கும் கல்வி உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். கங்கை தூய்மைப் பிரச்சாரத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். நீதித்துறையில் பணியாற்றியதன் மூலம் அவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவ்வாறு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us