sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பின்னலாடை தொழிலை சீரழிக்கும் சுனாமி வங்கதேசம்

/

பின்னலாடை தொழிலை சீரழிக்கும் சுனாமி வங்கதேசம்

பின்னலாடை தொழிலை சீரழிக்கும் சுனாமி வங்கதேசம்

பின்னலாடை தொழிலை சீரழிக்கும் சுனாமி வங்கதேசம்


UPDATED : ஏப் 11, 2024 12:00 AM

ADDED : ஏப் 11, 2024 05:30 PM

Google News

UPDATED : ஏப் 11, 2024 12:00 AM ADDED : ஏப் 11, 2024 05:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தால், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் கட்டமைக்கப்படுகிறது. இறக்குமதியை காட்டிலும், நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய, ஒவ்வொரு அரசும், ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க மானியம் வழங்குகிறது.

மத்திய அரசு சிறப்பு குழுவை அமைத்து, அதிக வர்த்தக தொடர்புடைய நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இருநாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்த, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளன. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கணிசமாக உயர்ந்துள்ளது.

சீனாவுக்கு சிவப்புக்கம்பளம்

வங்கதேசத்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், மறைமுகமாக சீனாவுக்கு சிவப்புக்கம்பளம் விரித்தது போல் மாறிவிட்டது. கடந்த, 2012ம் ஆண்டில், இந்தியா மற்றும் வங்க தேசத்துடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

சர்வதேச ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில், சீனாவுக்கு அடுத்தபடியாக, வங்கதேசம் உயர்ந்துள்ளது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளருக்கு கடும் போட்டியாக மாறிவிட்டது. ஏற்றுமதி வர்த்தகத்தின் நன்மைக்காக உருவான ஒப்பந்தம், இன்று ஒட்டுமொத்த ஆயத்த ஆடை உள்நாட்டு சந்தையை கடுமையாக பாதிக்க செய்துள்ளது.

நம்மிடமே கொள்முதல் இங்கேயே இறக்குமதி

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, வரியில்லாமல் இந்தியாவிடம் நுால் கொள்முதல் செய்யும் வங்கதேசம், துணிகளையும், ஆடைகளையும் உருவாக்கி, மீண்டும் வரிச்சலுகையுடன், இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்து வருகிறது. அபரிமிதமான வரிச்சலுகை காரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடைகளை காட்டிலும், கிலோவுக்கு, 50 ரூபாய் விலை குறைவாக விற்கப்படுகிறது.

இந்தியாவில் விளைவிக்கப்பட்ட பஞ்சு, வரியில்லாமல் வங்கதேசம் சென்று, ஆடைகளாக மாறி, வரியில்லாமலேயே, மீண்டும் இந்தியாவின் தென்கோடி மாநிலம் வரையில் சந்தைப்படுத்தப்படுகிறது. துவக்கத்தில் இருந்தே சரியான எதிர்ப்பு குரல் கொடுக்காததால், இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டமைக்கும் உள்நாட்டு சந்தைகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. குறு, சிறு நிறுவனங்களும் ஸ்தம்பித்துள்ளன.

வங்கதேசம், இந்தியாவுடன் வரியில்லா ஒப்பந்தம் செய்துள்ளது போல், சீனாவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேசத்திடம் இருந்து, துணியை இறக்குமதி செய்யும் சீனா, ஆடை வடிவமைத்து, வங்கதேசம் வழியாக, இந்தியாவுக்குள் இறக்குமதி செய்வதும் அதிகரித்துள்ளதாக, தொழில் வல்லுனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாழ்வாதாரம் ஸ்தம்பிப்பு

அண்டை நாடான வங்கதேசத்துடன் நல்லுறவு தொடர வேண்டும் என்பதற்காக, ஏராளமான சலுகைகளை வழங்கியது, இன்று உள்நாட்டு ஜவுளித்தொழிலை பலிகொடுத்தது போல் மாறிவிட்டது. ஏற்றுமதி வர்த்தகத்தில் கடும் போட்டியாக இருக்கும் வங்கதேசம், உள்நாட்டு வர்த்தகத்திலும் மூக்கை நுழைப்பதால், இங்கு பலரது வாழ்வாதாரம் ஸ்தம்பிப்பதாக, தொழில்துறையினர் கண்ணீர் வடிக்கின்றனர்.

பிளாட் டியூட்டி ரேட் அவசர அவசியம்

வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும். வங்கதேச ஆடைகளுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி விலையாக, 300 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். பிளாட் டியூட்டி ரேட் என்ற வகையில், கிலோவுக்கு, 150 ரூபாய் இருக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மாறாக, 450 ரூபாய் மதிப்புள்ள ஆடையை, 100 ரூபாய் என்று குறைவாக காட்டி இறக்குமதி செய்கின்றனர். உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்தை பாதுகாக்கவும், சாய ஆலை, நிட்டிங் உட்பட ஒட்டுமொத்த பின்னலாடைத் தொழிலை பாதுகாக்கவும், வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.

ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு அபாயம்

சீனாவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் இறக்குமதியாகிறது. விலை குறைவு என்பதால், வியாபாரிகளும் அங்கு சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கு மீண்டும் வரிவிதிக்க வேண்டும். இல்லாவிட்டால் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உள்நாட்டு வர்த்தகத்தை இழக்க நேரிடும்.

பொதுமக்கள் வாழ்வாதாரத்தை கட்டமைப்பது உள்நாட்டு வர்த்தகம்; அதில், வங்கதேச இறக்குமதி பாதிப்பை ஏற்படுத்துகிறது; எனவே, கட்டாயம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். கொள்கை முடிவு என்று தயவு காட்டிக்கொண்டிருக்காமல், உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம்(டீமா) தலைவர், முத்துரத்தினம் கூறினார்.

வடமாநிலங்களுக்குத் தொழில் நகரும்

வங்கதேசத்தில் இருந்து, வரிச்சலுகையுடன் ஆடை இறக்குமதி செய்வதால், குறைந்தபட்சம், கிலோவுக்கு, 50 முதல், 70 ரூபாய் விலை குறைவாக இருக்கிறது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திராவில் இருந்து, மிக குறைந்த விலையில், நுால் கொள்முதல் செய்கின்றனர். அதை துணியாகவும், ஆடைகளாகவும் மாற்றி, வரியில்லாமல் மிக குறைந்த விலையில் இறுக்குமதி செய்கின்றனர்.

உள்நாட்டில் சிரமப்பட்டு உற்பத்தி செய்யும் ஆடைகளை காட்டிலும், 15 முதல், 20 ரூபாய் விலை குறைவாக, வங்கதேச ஆடை விற்கப்படுகிறது. வங்கதேசத்தின் வரியில்லா ஆடை இறக்குமதி தொடர்ந்தால், திருப்பூர் பின்னலாடைத் தொழில் கூட, வடமாநிலங்களுக்கு நகர்ந்து சென்றுவிடும். ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலை பாதுகாக்க, வங்கதேச ஆடை இறக்குமதிக்கு, மீண்டும் வரிவிதிக்க வேண்டும் என தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறினார்.

கவுன்டர்வெய்லிங் வரி விதிப்பு கட்டாயம்கடந்த 2012ம் ஆண்டு, இந்தியா - வங்கதேசம் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதனால், உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியதால், ஜவுளி இறக்குமதியை கட்டுப்படுத்த, கவுன்டர்வெய்லிங் என்ற பெயரில், 12.6 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., 2017 ல் அறிமுகமான போது, அந்தவரி நீக்கப்பட்டதுதான், வங்கதேச இறக்குமதி அசுர வளர்ச்சி பெற காரணமாகிவிட்டது. இனியாவது, மீண்டும் வரி விதிப்பு செய்யாவிட்டால், இந்தியாவின் உள்நாட்டு ஜவுளி வர்த்தகம், வங்கதேசத்தின் கைக்கு சென்றுவிடும் என இளம் தொழில்முனைவோர் சந்தீப் கூறினார்.






      Dinamalar
      Follow us