UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:50 AM

கோவை :
சேரன் கல்விக் குழுமம் சார்பில், சேரன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் கலையரங்கத்தில், மாணவர்களுக்கு கல்விக் கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கனரா வங்கியின் மாவட்ட மேலாளர் ஜிதேந்திரன், முதுநிலை மேலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, பிரகாஷ், பேங்க் ஆப் இந்தியா உதவி மேலாளர் சிவசுப்ரமணி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கல்விக் கடன் பிரிவு அதிகாரி சுகன், ஆக்சிஸ் வங்கியின் மேலாளர் சாமுவேல் பீட்டர் பால் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
உயர் கல்விக்கான பல்வேறு வகையான கல்விக்கடன்கள், வட்டி விகிதங்கள், வங்கிகளின் நிதி உதவி வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்கினர்.
எஸ்.எம்.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் ஜாய் சுகன்யா, சேரன் செவிலியர் கல்லுாரியின் முதல்வர் மீனாகுமாரி, பார்மசி கல்லுாரியின் முதல்வர் தட்சிணாமூர்த்தி, பிசியோதெரபி கல்லுாரியின் முதல்வர்(பொ) அருணா பங்கேற்றனர்.

