UPDATED : பிப் 18, 2026 02:45 PM
ADDED : பிப் 18, 2026 02:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் உள்ள மேம்பட்ட வாகன ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம் மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியுடன், மூன்று ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த மூன்று ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆட்டோமேட்டிக் மற்றும் ஏ.ஐ., வாகன மென்பொருள், வாகன இயக்கவியல் மற்றும் டிஜிட்டல் இரட்டை தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை உறுதி செய்யும்.
கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், மாணவர் பயிற்சிகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் சார்ந்த கண்டுபிடிப்புகளை எளிதாக்குவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

