UPDATED : ஜன 06, 2026 07:09 PM
ADDED : ஜன 06, 2026 07:10 PM
பெருங்குடி:
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி விலங்கியல் துறை மற்றும் 'உன்னத் பாரத் அபியான்' சார்பில், சர்வதேச செல்லோ தினத்தை செல்லோவின் மெல்லிசைக்கும் நிஜப் பறவைகளின் கீச்சொலிக்கும் இடையேயான இணக்கத்தை கொண்டாடும் விதமாக இசைப் பறவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கணக்கெடுப்பு கல்லூரி வளாகத்தில் நடந்தது.
முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். சென்னை விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் சையது உசைன் மீரான் பேசினார்.
கணக்கெடுக்கப்பில் கருஞ்சிட்டு, கொண்டைக் குருவி, மைனா, தேன் சிட்டு, தையல் சிட்டு, செந்தார்ப் பைங்கிளி, பனங்காடை, மீன்கொத்தி, ஆசியன் குயில், வானம்பாடி, வாலாட்டி குருவி, கதிர் குருவிகள் ஆகிய பாடும் பறவைகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. பேராசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். பேராசிரியர் தமீம் அசாருதீன் வழிநடத்தினார்.

