வாசிப்பை நேசிக்கும் முதல்வரே நுாலகங்களை தரம் உயர்த்துங்க
வாசிப்பை நேசிக்கும் முதல்வரே நுாலகங்களை தரம் உயர்த்துங்க
UPDATED : ஆக 28, 2024 12:00 AM
ADDED : ஆக 28, 2024 09:00 AM
 கோவை:
 ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என, ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சத்தியநாராயணன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொது நுாலக துறையில், இப்போது, 1034 ஊர்ப்புற நுாலகர்கள், 13 ஆண்டுகளாக மிகவும் குறைந்த சிறப்பு காலமுறை ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் 50 வயதை கடந்தவர்கள்.
பள்ளிக் கல்வித்துறை பொது நுாலக இயக்ககம் மற்றும் ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில், மூன்றாம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
நுாலகங்கள் மீதும், வாசிப்பின் மீதும் மிகுந்த அக்கறையுள்ள தமிழக அரசு, எங்கள் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

