UPDATED : ஆக 28, 2024 12:00 AM
ADDED : ஆக 28, 2024 09:01 AM
கோவை:
கோவை, வேளாண் பல்கலை வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது.
பெங்களூரு, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகையில், வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் பரவலாக உள்ளன. இந்த தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கான போட்டித்திறனை அதிகரிக்க, இதுபோன்ற கருத்தரங்குகள் உதவும், என்றார்.
வனக்கல்லூரி முதன்மையர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், மாணவர்கள் வேலை தேடுவோராக இருக்கக்கூடாது; வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் சொந்த நிறுவனத்தை நிறுவி, அதில் பல்வேறு பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், என்றார்.
வனவியல் துறை பேராசிரியர்கள் சேகர், உமேஷ் கண்ணா உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

