தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி


UPDATED : அக் 13, 2026 06:58 PM

ADDED : அக் 13, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:58 PM ADDED : அக் 13, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தொழிற்கல்வி மாணவர்களுக்கான 25 நாட்களுக்கான தேனீ வளர்ப்பு திறன் பயிற்சி துவக்கவிழா மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார்.

மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் சுப்பிரமணியன் பேசுகையில், “தொழில் கல்வியானது பட்டறிவைப் பெறுவதற்கும், தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு தொழில் முனைவோராக மாறுவதற்கும், வாய்ப்புகளை உருவாக்கித் தர வல்லது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் பேசுகையில் “தேனீக்களைப் போல் மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு உழைக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

மேலுார் மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மாரி, நிலைய விஞ்ஞானிகள் சுப்பிரமணியன், செல்வராணி, அருள் அரசு, ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர்.

அலங்காநல்லுார், திருவாதவூர், எம்.சத்திரப்பட்டி அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். இணைப்பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். தொழில்நுட்ப உதவியாளர்கள் விஜயலலிதா, ரம்யா, பண்ணை மேலாளர் காயத்ரி தேவி ஒருங்கிணைத்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us