டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
UPDATED : அக் 13, 2026 07:01 PM
ADDED : அக் 13, 2026 07:04 PM
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்-பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 6,574 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப், - 4 தேர்வு அறிவிப்பு கடந்த, 6ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு வரும் நவம்பர், 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை எழுதுபவர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடி இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவல-கத்தில் வரும், 15ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தேர்வர்கள், 04286 222260 என்ற போன் நம்பரிலோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி தங்களது பெயர், முகவரி மற்றும் போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
நேரடி பயிற்சியில் சேர விரும்பும் மனுதாரர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வீடியோ வழிக் கற்றல் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
