UPDATED : ஏப் 10, 2025 12:00 AM
ADDED : ஏப் 10, 2025 08:40 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
மக்களிடையே தேனீக்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில், 20 ஆயிரம் தேனீ வளர்ப்பாளர்கள், 2 லட்சம் இந்திய தேனீப்பெட்டிகளை பராமரித்து, ஆண்டுக்கு 2,500 டன்களுக்கும் அதிகமாக, தேனை உற்பத்தி செய்கின்றனர். தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், பூச்சியில் துறை சார்பாக, ஏப்., மாதத்துக்கான, தேனீ வளர்ப்பு சம்பந்தமான பயிற்சி நடந்தது.
தேனீ இனங்களை கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விபரம், தேனை பிரித்தெடுத்தல் உட்பட, பல வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீக்கூட்டங்களை கையாளும் முறை, தேனீப்பெட்டிகளை பராமரித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

