வெயிலில் வெப்பம் தணிக்க கூல் டிரிங்ஸ் குடிக்கக்கூடாது; ஆயுர்வேத டாக்டர் எச்சரிக்கை
வெயிலில் வெப்பம் தணிக்க கூல் டிரிங்ஸ் குடிக்கக்கூடாது; ஆயுர்வேத டாக்டர் எச்சரிக்கை
UPDATED : ஏப் 10, 2025 12:00 AM
ADDED : ஏப் 10, 2025 08:47 AM
கோவை:
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாகி வரும் நிலையில், உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது முக்கியமான தேவையாகி விட்டது.
இந்த சூழ்நிலையில், பலர் தாகத்தை குறைக்க, குளிர்பானங்களை பிரிட்ஜில் வைத்து குடிப்பதை வழக்கமாக்கி உள்ளனர். ஆனால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என, ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் விஜய்பிரியா எச்சரிக்கிறார்.
அவர் கூறியதாவது:
உடலின் இயல்பான வெப்பநிலை, 98°- 99°F ஆக இருக்க வேண்டும். நம்முடைய உடலில் 80 சதவீத நீர் சத்து உள்ளது. அந்த சதவீதம் குறையும் போது தாகம் எடுக்கும். அப்போது, குளிர்பானம் குடித்தால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.
கூல் டிரிங்க்ஸ், கார்பன் டை ஆக்சைடு கலந்த பானங்கள் என்பதால், அவை உடலுக்குள் சென்றவுடன் சிறுநீரகங்கள், மற்ற உறுப்பு செயல்பாடுகளை துரிதப்படுத்தி விடும். இதனால் கல்லீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
தற்போது சர்க்கரை மற்றும் கார்பன் உணவுகளை, அதிகமாக சாப்பிடுவதால், உடலின் கொழுப்பு அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நீர்ச்சத்து குறைவுக்கும் காரணமாகிறது. நீர் சத்து குறையும்போது, மூளைக்கு தேவையான நீர்ச்சத்து குறைந்து, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
வெயிலில் சுற்றி விட்டு, வீட்டுக்குள் வந்ததும், சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரையே குடிக்க வேண்டும். ஜில்லென்று குடிக்க வேண்டும் என்றால் பானை தண்ணீர், நன்னாரி சர்பத், பழ ஜூஸ், வெட்டிவேர் தண்ணீர், மோர், கம்பங்கூழ், இளநீர் போன்ற இயற்கை பானங்களை தேர்வு செய்யலாம்.
அசைவ உணவு, டீ, காபி, மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகள், உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்கின்றன. அவற்றுக்கு பதிலாக, ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடலாம்.
கோடை காலத்தில் ஜீரண சக்தியை மேம்படுத்த தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு, டாக்டர் விஜய்பிரியா கூறினார்.
கூல் டிரிங்க்ஸ், கார்பன் டை ஆக்சைடு கலந்த பானங்கள் என்பதால், அவை உடலுக்குள் சென்றவுடன் சிறுநீரகங்கள், மற்ற உறுப்பு செயல்பாடுகளை துரிதப்படுத்தி விடும். இதனால் கல்லீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
வெயிலில் சுற்றி விட்டு, வீட்டுக்குள் வந்ததும், சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரையே குடிக்க வேண்டும். ஜில்லென்று குடிக்க பானை தண்ணீர், நன்னாரி சர்பத், பழ ஜூஸ், வெட்டிவேர் தண்ணீர், மோர், கம்பங்கூழ், இளநீர் போன்ற இயற்கை பானங்களை தேர்வு செய்யலாம்.

