UPDATED : ஜன 23, 2025 12:00 AM
ADDED : ஜன 23, 2025 10:03 AM
புதுச்சேரி:
கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நடத்தப்படும் தொழில்நுட்ப கல்வியான நுண்கலை துறை (பைன் ஆர்ட்ஸ்) படிப்பை, கலை மற்றும் அறிவியல் கல்வியாக மாற்ற, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கலை பண்பாட்டு துறை செயலர் எழுதிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்.
பைன் ஆர்ட்ஸ் துறையின் தனி தன்மையை கல்லுாரி நிர்வாகம் அழிக்கும் முயற்சியில் ஈடுப்படுவதை கைவிட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் பைன் ஆர்ட்ஸ் படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ., அப்ரூவல் மற்றும் அனுமதி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் நுண்கலை துறையை இணைக்க வேண்டும்.
நுண்கலை படிப்பு தொழில்நுட்ப கல்வியில் வராது என தவறான ஆவணங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் போஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக மாணவர்களை கொண்ட நுண்கலை துறைக்கு தனி முதல்வர் நியமிக்க வேண்டும்., ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இன்றி நடத்தப்படும் கலை மற்றும் நுண்கலை முதுகலை படிப்பிற்கு அங்கீகாரம் பெற்ற பின்பே தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது.