பாரதிதாசன் கல்லுாரியில் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு
பாரதிதாசன் கல்லுாரியில் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
பாரதிதாசன் கல்லுாரியில் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை காரணமாக கல்லுாரிகளில் நடந்து வந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 12ம் தேதி நடக்கவிருந்த தேர்வு வரும் ஜன., 4ம் தேதியும், 13ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஜன., 6ம் தேதி நடக்கும் கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.