தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் நினைவு நாள் கட்டுரை போட்டி

பாரதியார் நினைவு நாள் கட்டுரை போட்டி

பாரதியார் நினைவு நாள் கட்டுரை போட்டி


UPDATED : ஆக 12, 2026 04:28 PM

ADDED : ஆக 12, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 04:28 PM ADDED : ஆக 12, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளான, 2021 செப்., 11ம் தேதியை அரசு மகாகவி நாளாக அறிவித்தது. இதையொட்டி, ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் நினைவு நாள் கட்டுரை போட்டிகள் கல்லூரி அளவில் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களில், மண்டல, மாநில அளவிலான கவிதைப் போட்டியும் நடத்தப்படுகிறது. அப்போட்டியில் இறுதியாக தேர்வு செய்யப்படும், மாணவர், மாணவி தலா ஒருவருக்கு, 'பாரதி இளங்கவிஞர் விருது' மற்றும், 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும்.

அதன்படி நடப்பாண்டில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நாளை காலை, 09:00 மணிக்கு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடக்கிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி மற்றும் பல்வகை தொழில் நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கல்லுாரியிலிருந்தும் போட்டியில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டி நாளன்றே கவிதைகள் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றவர் மண்டல அளவிலான கவிதைப் போட்டியில் பங்கு பெற பரிந்துரை செய்யப்படுவர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us