தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்


UPDATED : ஆக 12, 2026 04:27 PM

ADDED : ஆக 12, 2026 04:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 04:27 PM ADDED : ஆக 12, 2026 04:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
வேப்பனஹள்ளியில், 49 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டார வளமையத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் உள்ளடங்கிய கல்வி பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வட்டார வள மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குமரன் வரவேற்றார்.

சிறப்பு பயிற்றுனர்கள் ரெஜினா, ரோசிராணி, ராஜேஷ், ரேவதி, பள்ளி ஆயத்த பயிற்சி மைய ஆசிரியை வரலட்சுமி, உதவியாளர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களுக்கு, தனியார் நிறுவன பங்களிப்புடன் உபகரணங்கள் வழங்கப்பட்டன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us