UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 10:04 AM

கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ், ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு, செப்., 8ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2019-20ம் ஆண்டில் எம்.எஸ்சி., சாப்ட்வேர் சிஸ்டம்ஸ், 2021-22ல் இளநிலை மாணவர்களும், 2022-23 முதுநிலை மாணவர்களும் உயர்கல்வியை, வேலைவாய்ப்பு தொடரும் வகையில், அரியர் தேர்வுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பாடத்தில் அரியர் வைத்த மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம். செய்முறை, பிராஜக்ட், வைவா தேர்வுகளில் அரியர் உள்ளவர்கள், இதில் பங்கேற்க இயலாது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, பல்கலை இணையதளத்தை (https://b-u.ac.in/) பார்க்கலாம்.