தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
UPDATED : அக் 04, 2025 10:32 AM
ADDED : அக் 04, 2025 10:33 AM
எழுமலை:
தினமலர் செய்தியால் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடத்தப்பட்டுள்ளது.
எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இங்கு 34 வகுப்பறைகள், 38 ஆசிரியர்கள் உள்ளனர். எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. தினசரி 4 வகுப்பு மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்தனர்.
விரைவில் கட்டட வசதி செய்து தரவேண்டும் என்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 8 புதிய வகுப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வித்துறை உள்ளிட்ட கலெக்டர் அலுவலக அரசு அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர். கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தனர். பூமிபூஜை நேற்று நடந்தது. உதவித் தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர் பாண்டி பங்கேற்றனர்.