பல்லாவரம் அரசு பள்ளியில் 8 வகுப்பறை கட்ட பூமி பூஜை
பல்லாவரம் அரசு பள்ளியில் 8 வகுப்பறை கட்ட பூமி பூஜை
UPDATED : பிப் 19, 2025 12:00 AM
ADDED : பிப் 19, 2025 09:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்:
பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பறைகளில், அதிகமான சேர்க்கையால், மாணவர்கள் அமர இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவன நிதி வாயிலாக, 1.12 கோடி ரூபாய் செலவில், எட்டு வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி, மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர். புதிதாக கட்டப்பட உள்ள வகுப்பறை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

