தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 கோடி மாணவர்களின் பயோமெட்ரிக் விபரங்கள் ஆதாருடன் இணைப்பு

2 கோடி மாணவர்களின் பயோமெட்ரிக் விபரங்கள் ஆதாருடன் இணைப்பு

2 கோடி மாணவர்களின் பயோமெட்ரிக் விபரங்கள் ஆதாருடன் இணைப்பு


UPDATED : ஆக 23, 2026 04:39 PM

ADDED : ஆக 23, 2026 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 04:39 PM ADDED : ஆக 23, 2026 04:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நாட்டில், 1.56 லட்சம் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆதார் சிறப்பு முகாம்களால், இரண்டு கோடி மாணவர்களின், 'பயோமெட்ரிக்' பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ., கூறியுள்ளதாவது:


நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்காக, ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் வளரும் நிலையில் உள்ளதால், கைரேகை, விழித்திரை உள்ளிட்ட பயோமெட்ரிக் விபரங்கள் முழுமையடைவதில்லை. அதனால், அவர்களுக்கு 5 மற்றும் 15 வயதாகும் போது, பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம்.

அப்போது தான், 'நீட் ஜே.இ.இ., கியூட்' உள்ளிட்ட உயர் கல்வி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், உதவித்தொகை, திட்டப் பலன்களை பெறவும் இந்த ஆதார் புதுப்பிப்பு அவசியமாகிறது.

இதனால், மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது, ஆதார் மையங்களுக்கு அலைவது உள்ளிட்ட சிரமங்களை தவிர்க்கும் வகையில், தனித்துவ அடையாள ஆணையம், அடுத்த மாதம் வரை, கட்டாய ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் எனும் எம்.பி.யு., முகாம்களை, பள்ளிகளில் நடத்தி வருகிறது.

இது வரை நாடு முழுதும், 1.56 லட்சம் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இரண்டு கோடி மாணவ, மாணவியரின் பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த விபரங்கள், பள்ளிக் கல்வித்துறையின், 'யுடைஸ் பிளஸ்' இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, அவர்களின் தொடர் கல்வி சார்ந்த விபர பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us