UPDATED : ஆக 21, 2026 04:24 PM
ADDED : ஆக 21, 2026 04:25 PM
வானுார்:
வானுார் அரசு கலைக் கல்லுாரியில் புத்தகக் கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலம் ரோட்டில் செயல்பட்டு வரும் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களிடையே படிக்கும் பழக்கம், கல்வி வளர்ச்சி தனித்திறன் மேம்பாட்டிற்காக கல்லுாரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லுாரி முதல்வர் வில்லியம் புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்து, நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ள புத்தகக் கண்காட்சியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த புத்தகக்கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் துவக்க விழாவில், மண்டல மேலாளர் தனசேகரன், கிளை மேலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் அருளமுதம் தலைமையில் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
