UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 09:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டத்தின் ஏழாம் ஆண்டு விழா, சத்தி சுந்தர் மஹாலில், நடந்தது.
ரோட்டரி சத்தி டைகர்ஸ் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். இதையொட்டி புத்தக திருவிழாவை எழுத்தாளர் ஈரோடு கதிர், தொடங்கி வைத்தார். வாகசர் வட்ட தலைவர் யாழினி ஆறுமுகம் வரவேற்றார். புத்தக கண்காட்சியில் தினமும் மாலையில், சொற்பொழிவு நடக்கிறது. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், திரைப்பட இயக்குனர் அஜயன்பாலா, எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் ஆகியோர் பேசினர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியை பாராட்டி, கோவை சதாசிவம், இன்று பேசுகிறார். எழுத்தாளர் பவுசியா இக்பால், நாளை பேசுகிறார். எழுத்தாளர், கதை சொல்லி பவா செல்லதுரை, 18ம் தேதி விழா நிறைவுரையாற்றுகிறார்.