UPDATED : மார் 22, 2025 12:00 AM
ADDED : மார் 22, 2025 10:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் இன்று( மார்ச் 21) துவங்கி மார்ச் 30 வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.
இங்கு 86 அரங்குகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன. தினமும் தமிழ் ஆர்வலர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய உணவுகள், மின்னுாலகம், ஓவியம், தொல்லியல், மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. காலை 10:00 முதல் இரவு 9:00மணி வரை நடக்கிறது.
இங்கு ஸ்டால் எண் 23 ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்., வெளியீடு ஆன்மிகம், பொது அறிவு, போட்டித்தேர்வுக்கு வழிகாட்டி உள்ளிட்ட புத்தகங்களை தள்ளுபடி விலையில் மாணவர்கள், பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.