UPDATED : பிப் 27, 2025 12:00 AM
ADDED : பிப் 27, 2025 04:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
விதான் சவுதா வளாகத்தில், இன்று முதல் மார்ச் 3ம் தேதி வரை, புத்தக மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு கருத்தரங்குகளும் நடக்கவுள்ளது.
இது குறித்து, அரசு வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின், விதான் சவுதா வளாகத்தில், புத்தக மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 முதல், மார்ச் 3 வரை, புத்தக மேளா நடக்கும். 175 புத்தக கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய புத்தகம் வெளியீடு, கருத்தரங்குகள் நடக்கும்.
மேளாவில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் நிதியில் இருந்து, 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை புத்தகங்கள் வாங்கி, நுாலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வினியோகிக்கலாம். பொது மக்களும் மேளாவில் தேவையான புத்தகங்கள் வாங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.