UPDATED : செப் 17, 2026 02:21 PM
ADDED : செப் 17, 2026 02:22 PM
விக்கிரவாண்டி:
பி.எஸ்.சி., நர்சிங் மற்றும் பி .பார்ம்., துறை வகுப்புகளில் சேர பதிவு தேதியை மருத்துவ கல்வி இயக்குனரகம் நீட்டித்துள்ளதாக, விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லுாரி முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சுகாதாரம் சார்ந்த இளங்கலை பட்ட படிப்புகளான, பி. எஸ். சி., நர்சிங் மற்றும் பி .பார்ம் துறை வகுப்புகளில் சேரவும்,
இடங்களை தேர்வு செய்யவும் மருத்துவ கல்வி இயக்குனரகம் தேதி நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன்படி வரும், 19ம் தேதி பதிவு செய்வதற்கும், இடங்களை தேர்வு செய்யவும் கடைசி நாள். இதற்கான முடிவுகள் வரும் 21ம் தேதி மருத்துவ கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்படும்.
சம்பந்தப்பட்ட துறைகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
