தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 17, 2026 02:22 PM

ADDED : செப் 17, 2026 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 02:22 PM ADDED : செப் 17, 2026 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026 - 27ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில், 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் தமிழகத்தை சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல், புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான தேதி இணையத்தில் அறிவிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை http://socialjustice.gov.in அறிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us