UPDATED : நவ 01, 2024 12:00 AM
ADDED : நவ 01, 2024 10:13 AM
திருமங்கலம்:
திருமங்கலம் நகராட்சி சார்பில் உசிலம்பட்டி ரோட்டில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பின்பகுதியில் அறிவுசார்மையம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதில் பொதுத் தேர்வுகளுக்கான புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. இதன் பொறுப்பாளராக கவிதா என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் அவர் மையத்தை பூட்டி விட்டு சென்று விட்டார்.
மையத்தின் பின்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மூன்று டேபிள் பேன், 9 கம்ப்யூட்டர் மானிட்டர்களை திருடியுள்ளனர். ஆனால் வெளியே கொண்டு செல்ல முடியாததால் மானிட்டர்களை மட்டும் அந்த பகுதியில் வீசிவிட்டு தப்பி விட்டனர். கவிதா போலீசில் புகார் செய்தார்.
சி.சி.டி.வி., பதிவுகள் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.