தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நுாலகத்தில் கட்டுமான பணி இழுபறி வாசகர்கள் பாதிப்பு

நுாலகத்தில் கட்டுமான பணி இழுபறி வாசகர்கள் பாதிப்பு

நுாலகத்தில் கட்டுமான பணி இழுபறி வாசகர்கள் பாதிப்பு


UPDATED : நவ 01, 2024 12:00 AM

ADDED : நவ 01, 2024 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2024 12:00 AM ADDED : நவ 01, 2024 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை நுாலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுமான பணி மூன்று மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாசகர்கள் பாதித்து வருகின்றனர்.

உடுமலை தளி ரோட்டில், முதல் கிளை நுாலகம் அமைந்துள்ளது. தினமும், இந்த நுாலகத்திற்கு, வாசகர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதால், நுால்கள், இணைய தளம் என அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி நுாலகமாக உள்ளது.

மத்திய அரசு சார்பில், தமிழகத்திலுள்ள, 23 நுாலகங்களில், கூடுதல் கட்டடம் மற்றும் வசதிகள் மேற்கொள்ளும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போல், அரசு கட்டடங்கள் பொதுப்பணித்துறை வாயிலாக கட்டப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் வசம் கட்டுமான பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முதல் கிளை நுாலகத்தில், வாசகர் படிக்கும் அறை, ரூ. 22 லட்சம் மதிப்பில், உடுமலை நகராட்சி வசம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு முன் பணி துவங்கியது.

பிரதான ரோடு மற்றும் பஸ் ஸ்டாப் பகுதியில் அமைந்துள்ள நுாலகத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கின. ஒரு சில மாதம் மட்டும் பணி நடந்த நிலையில், கடந்த மூன்று மாதமாக பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதிகளவு வாசகர்கள் வந்து செல்லும் நிலையில், ஆபத்தான நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணி, ஜல்லி, எம்-சாண்ட், கம்பிகள் என நுாலக வளாகம், பிரதான ரோட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், நுாலகத்திற்குள் நுழைய முடியாமல், கட்டுமான பொருட்களை கடத்து ஆபத்தான முறையில் செல்லும் அவல நிலை உள்ளது.

எனவே, நுாலகத்தில் கட்டுமான பணியை விரைந்து முடிக்கவும், வாசகர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us